வரிச் சலுகைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது என முதலீட்டு மேம்பாட்டுகள் இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவித்த அவர், முதலீடுகளை மேம்படுத்துவதற்காக முதலீடுகளின் அளவைப் பொறுத்து பலவிதமான சலுகைகள் அறிமுகப்படுத்தப்படும் என கூறினார்.
அத்தோடு சலுகைகள் எவ்வாறு வழங்கப்படும் என்பது குறித்து நிதி அமைச்சுடன் ஒப்பந்தம் எட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இந்த திட்டங்களுக்கு ஒப்புதல் பெற முதலீட்டாளர்களுடன் இணைந்து செயற்படும் அதிகாரிகள் குழுவை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இதேவேளை வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக உலகளவில் விளம்பர பிரச்சாரத்தை மேற்கொள்ள அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.