இன்று (ஞாயிற்று கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கூகுள் தகவல்களை வைத்து மோதிலால் நேரு குறித்து காணொளி வெளியிட்டதற்காக ராஜஸ்தான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் நடிகை பாயல் ரோஹத்ஹி சர்ச்சைக்குரிய காணொளியொன்றை பதிவிட்டிருந்தார்.
அந்த காணொளியில், மோதிலால் நேரு குறித்தும், ஜவகர்லால் நேரு குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டது.
இதனையடுத்தே குறித்த நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.