அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டிக் களத்திலிருந்து வெளியேறவுள்ளதாக செனட்டர் கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார்.
நிதி பற்றாக்குறை காரணமாகவே அவர் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
55 வயதான கமலா ஹாரிஸ் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களத்திலிருந்த ஒரேயொரு சிறுபான்மை இன பெண் வேட்பாளர் ஆவார்.
ஆனால் அவருடைய பிரசாரக் கொள்கைகள் ஆப்பிரிக்க – அமெரிக்க வாக்காளர்களிடையே பெரிதளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
அவருடைய சொந்த மாநிலமான கலிஃபோர்னியாவிலும் கமலா ஹாரிஸ் அதிகளவு வாக்கு வங்கியை பெறவில்லை.
அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் அந்தப் பதவியை ஏற்ற முதல் பெண் என்ற பெறுமையை பெற்றிருப்பார்.