மரணம் தொடர்பாக அவரது தந்தை தொடர்ச்சியாக சில அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
பஞ்சாப்பைச் சேர்ந்த பிரப்லீன் மதாரு (வயது 21), கனடாவில் சர்ரே பகுதியில் உள்ள வீடு ஒன்றில் உயிரிழந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட்து.
அவருடன் 18 வயதான உள்ளூர் இளைஞர் ஒருவரின் உடலும் கண்டெடுக்கப்பட்டது. இருந்த போதும் குறித்த இளைஞர் யார் என்பதைத் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தநிலையில், குறித்த யுவதி உயிரிழந்த தகவல் தவிர வேறெந்தத் தகவலும் அளிக்கப்படாத நிலையில், கனடாவுக்குச் சென்ற பிரப்லீனின் தந்தையான குர்தயால் சிங், புதல்வியின் உயிரிழப்புத் தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே சந்தேகம் தெரிவித்து வந்தார்.
கனடாவுக்குச் சென்று தனது மகளின் அறையைப் பார்வையிட்ட பின் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில்; சிங், பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அவற்றில் முதன்மையானது, தனது மகளைக் கொலை செய்தது அவளுடைய கணவன் என்பதுதான். பிரப்லீனுடன் உயிரிழந்து காணப்பட்ட நபரின் பெயர் பீற்றர் பியெர்மன் (Pieter Biermann) என்றும் அவர் லாங்லி (Langley) என்ற பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன் பணியிடத்தில் தன் மகளும் பீற்றர் என்பவரும் ஒருவரையொருவர் சந்தித்ததாகவும், சிறிது காலத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும் பெண்ணின் தந்தையான சிங் தெரிவித்துள்ளார்.
அப்போது திருமண சான்றிதழ் உட்பட அதற்கான எந்த ஆதாரமும் தனக்குக் கிடைக்கவில்லை என்றும், ஆனால் அவர்களுக்குத் திருமணமானதாக தனக்குத் தெரியவந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தான் கனடாவுக்கு வந்துள்ள நிலையில், அவர்களது திருமண ஔிப்படங்கள் மற்றும் நண்பர்களின் வாழ்த்து அட்டைகளும் தனக்கு கிடைத்துள்ளதையடுத்தே தன் மகளுக்கு திருமணமான செய்தியை தான் உறுதி செய்துகொண்டதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் பிரப்லீனின் கணவனான பீற்றர் தனது மகளைச் சுட்டுக்கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் சிங் தெரிவித்துள்ளார். பீற்றர் உயிரிழந்த போதும், தன் மகள் எதனால் கொல்லப்பட்டாள் என்பதைத் தான் அறியவிரும்புவதாகத் தெரிவித்துள்ள சிங், தனது மக்களின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று கூறியுள்ளார்.