வேலர் சின்னக்குளம், மரையடித்த குளம் மக்கள் மிகையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதிகளிலுள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளமையினால் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை பராமரிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கிராமத்துக்குள் குடியேறி 5 வருடங்களாகின்றன. ஆனால் இதுவரை காலமும் உரிய வீட்டுத்திட்டம் வழங்கப்படாமல் மழை, வெயில் ஆகியவற்றினால் ஏற்படும் அனர்த்தங்களுக்கு தொடர்ச்சியாக முகம்கொடுத்து வருவதாகவும் அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
காட்டுப் பிரதேசத்தை அண்டிய குடியிருப்புக்களாக இருப்பதன் காரணத்தினால் விசப்பூச்சிகள், வனவிலங்குகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அம்மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே தங்களுக்கு அவசர நிவாரண உதவிகள் தேவைப்படுகின்றதென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.