ஒளிரும் மின்விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் தமது பொழுதுபோக்கிற்காக காலிமுகத் திடலுக்கு வரும் பொதுமக்கள், குறித்த பகுதியில் போதிய வெளிச்சமின்மை காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, புதிய அரசாங்கம் இவ்வாறான பல்வேறு திட்டங்களை அதிரடியாக அமுல்படுத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.