படை வீரர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்த தகவல்களை பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் மக்களவையில் எழுத்துபூர்வமாக அறிக்கையொன்றை தாக்கல் செய்துள்ளார்.
குறித்த அறிக்கையில், கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் இந்த இறப்புகள் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 891 இராணுவ வீரர்கள், 182 விமானப்படை வீரர்கள், மற்றும் 40 கடற்படை வீரர்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சக வீரர்களால் 30 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட பிரச்சினை, மனைவியுடன் கருத்து வேறுபாடு, மன அழுத்தம், நிதிப் பிரச்னைகள் உள்ளிட்ட காரணங்களுக்காக பாதுகாப்பு படை வீரர்கள் தற்கொலை செய்துகொண்டதாக பாதுகாப்புத்துறையின் மனநல ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.