குறித்த தீவின் வடமேற்கு மூலையில் விமானம் விபத்துக்குள்ளானதாக கப்ரியலா ஆர்.சி.எம்.பி (Royal Canadian Mounted Police) அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில் விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6:10 அளவில் தகவல் கிடைத்ததாக அம்பியூலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது. இதையடுத்து விபத்து நடந்த இடத்திற்கு ஐந்து அம்பியூலன்ஸ்கள் படகு வழியாக அனுப்பிவைக்கப்பட்டன.
இதேவேளை, விபத்து நடந்த இடத்தில் ஆர்.சி.எம்.பி. அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். எனினும் விமானத்தில் எத்தனை பேர் பயணித்தனர், உயிரிழப்புக்கள் மற்றும் விமானம் தொடர்பான தகவல் தெரிவிக்கப்படவில்லை.
விமான பயணத்தின்போது குறித்த தீவுப்பகுதி பனிமூட்டமாக காணப்பட்ட நிலையில் விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.