உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்துள்ள முஸ்லிம் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை சட்டத் திருத்த சட்டமூலத்திற்கு மத்திய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று (புதன்கிழமை) கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த குடியுரிமை சட்டத் திருத்த சட்டமூலத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம் எதிர்வரும் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்படி குறித்தம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சட்டமூலம், கடந்த 1955-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்து, சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வந்துள்ளவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதாகும். ஆனால், இந்த சட்டமூலத்தை கடந்த பா.ஜ.க. ஆட்சியில் அறிமுகம் செய்தபோது எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.
ஒருவருக்குக் குடியுரிமை வழங்குவதை மதத்தின் அடிப்படையில் நம்பிக்கை அடிப்படையில் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், கடந்த மக்களவை முடிந்ததும் இந்த சட்டமூலம் காலாவதியானது. தற்போது மீண்டும் அமைச்சரவை இந்த சட்டமூலத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த சட்டமூலத்தை கடந்த ஆட்சியில் அறிமுகம் செய்தபோது காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடதுசாரிகள், பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கடுமையாக எதிர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.