அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்ட சுவிஸ் தூதரக பெண் ஊழியர் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அனுப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை அடுத்து அவர் இன்று (திங்கட்கிழமை) குற்றப்புலனாய்வுப் பிரிவு அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதனை அடுத்து சற்றுமுன்னர் அவர், கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் 5.30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 மணி வரை குறித்த பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், மேலும் வாக்குமூலத்தை பதிவு செய்ய இன்று சிஐடி முன் ஆஜராகுமாறு அவர் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவியல் விசாரணைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, சம்பவம் இடம்பெற் நவம்பர் 25 ஆம் திகதி குறித்த பெண் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டாரா அல்லது தாக்கப்பட்டாரா என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரிக்கு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார்.
அத்துடன் அவரது மனநிலை குறித்தான அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு, கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.