போட்டியிடவில்லை என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
தேர்தல் குறித்து கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூறுகையில், “உள்ளூராட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது. இந்தத் தேர்தலில் ஊழல் கட்சிகள் தங்களுக்குள் போட்டுக்கொண்ட வியாபார பங்கீடு மட்டுமே தேர்தலில் அரங்கேறும்.
இரு கட்சிகள் எழுதி, இயக்கும் அரசியல் நாடகத்தில் எந்த பாத்திரத்தையும் ஏற்கப் போவதில்லை. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்குபெறுவதால் கிட்டக்கூடிய முன்னேற்றம் சொற்பமானது. மக்கள் நலன் நோக்கிய பயணமாக இந்த உள்ளாட்சித் தேர்தல் இருக்கப் போவதில்லை.
2021 தேர்தலில் ஆட்சியை பிடிப்பதே நம் இலட்சிமாக இருக்கின்றது. அப்போது வெற்றி நிச்சயம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் நாட்டில் உள்ளூராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27ஆம் திகதி மற்றும் 30ஆம் திகதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் தேர்தலலை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.