நிலையில், பாணின் விலையை குறைக்கவும் தயாராக இருப்பதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவினை 70 ரூபாய்க்கு வெதுப்பகங்களுக்கு வழங்கினால் ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாயால் குறைக்க முடியும் என குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மா நிறுவனங்களினால் தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மா 90 ரூபாயக்கு வழங்கப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அண்மையில் அரசாங்கம் மேற்கொண்ட வரி குறைப்பினை அடுத்து, பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாயால் குறைக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.