இந்த நூற்றாண்டின் முதல் காலாண்டில்தான் புவியின் வெப்பம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஐ.நாவின் வானியல் பிரிவான உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைத்தொழில் புரட்சிக்கு முன்பிருந்ததை விட உலகின் வெப்பநிலை இந்த ஆண்டில் இதுவரை 1.1 பாகை செல்ஸியஸ் அதிகரித்துள்ளது.
இதன்மூலம், இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே அதிக புவி வெப்பம் கொண்ட 3 ஆண்டுகளில் ஒன்றாக 2019 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது.
பெற்றோலியப் பொருள்களை எரியூட்டுதல், கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், பயிா் வளா்ப்பு, சரக்குப் போக்குவரத்து ஆகிய செயல்பாடுகளால் வளிமண்டலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கரியமில வாயுப் பொருள்கள் இந்த ஆண்டு கலக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்காரணமாக, புவியின் வெப்பம் மேலும் அதிகரிக்கும். எனவே, கடந்த ஆண்டுகளை விட 2020 ஆம் ஆண்டில்தான் புவியின் வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.