சிஹாப்தீனுக்கு எதிரான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசேட குழுவொன்று இவ்விடயம் தொடர்பாக ஆராய்வற்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் அதிகாரியின் தலைமையிலான குழு, குருணாகல் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சரத் வீர பண்டார, பிரதி பணிப்பாளர் சந்தன கந்தன்கமுவ ஆகியோரைச் சந்தித்து இந்த விசாரணைகள் தொடர்பாக தகவல்களைப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன், வைத்தியர் ஷாபியிடம் மீண்டும் விசாரணையை முன்னெடுப்பதற்கு முன்னர் அவரினால் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சிங்கள தாய்மார்களிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மீண்டும் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் வைத்தியர் ஷாபியின் சொத்துக்கள் குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது