கூண்டில் நின்ற வீ. ஆனந்தசங்கரிக்கு தானே எடுத்துக்கூறியதாக என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், தவறை சுட்டிக்காட்டியமையினாலேயே அவர் இவ்வாறு பேசுவதாகவும் கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தமிழர் விடுதலை கூட்டணிக்கு எதிராக 2003ஆம் ஆண்டு அவர் முன் வைத்த வழக்கில் வழக்காளியாக அவர் சாட்சியம் அளிக்கும்போது, நான் அவரை குறுக்கு விசாரணை செய்தேன்.
அப்போது, தமிழர் விடுதலை கூட்டணியின் ஆரம்ப தலைவர்கள் யார் என நான் கேட்ட போது இரண்டு தலைவர்கள் என பதில் அளித்தார். நான் அதனை திருத்தி மூன்று தலைவர்கள் என கூறினேன்.
இந்த விசாரணையின்போது அவர் வரலாற்றை தவறாக சொன்னதை சுட்டிக்காட்டினேன். அவர் அந்த தவறை ஏற்றுக்கொண்டமை பதிவில் உள்ளது. அந்த கோபம் அவருக்கு விட்டுப்போகாததால் எனக்கு வரலாறு தெரியாது என கூறுகின்றார்.
அவர் வயது முதிர்ந்தவர் எனக்கு பேரன் முறையானவர். அவருடன் மல்லுக்கட்ட நான் விரும்பவில்லை. அவருக்கு ஞாபக மறதியும் அதிகம்” என கூறினார்.