காணி, சொத்து மற்றும் விடுதி ஆகியவற்றுக்கான புதிய பணிப்பாளராக கடமைகளை ஏற்றுக்கொண்டார்
ராணுவத் தலைமையகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் தனது கடமைகளைப் உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, முன்னதாக ரணவிரு சம்பத் மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியிருந்தார்.
2018ஆம் ஆண்டு லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, புலம்பெயர் தமிழர்களை கழுத்தை அறுக்கும் சைகையை காட்டி அச்சுறுத்தியதாக பிரியங்க பெர்னான்டோ மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 2400 பவுண்ட்ஸ் (இலங்கை மதிப்பில் 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய்) அளவில் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.