வழங்கும் செயன்முறையை தொடர்ந்தும் செயற்படுத்தும் கல்வி அமைச்சின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி 2020 ஆம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளை பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர்களை தொடர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று (வியாழக்கிழமை) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்போதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டில் புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தின் தொடக்கத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலை சீருடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும முன்னர் குறிப்பிட்டிருந்தார்.
சீருடைக்கு பதிலாக வவுச்சர்களை வழங்க கடந்த அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக அரசாங்கத்திடம் அதிக செலவுகள் ஏற்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது