சதீஷின் திருமணம் இன்று காலை சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
திருமணத்தை முன்னிட்டு நேற்று மாலை நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, ஜீவா, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் நேரில் கலந்துகொண்டு சதீஷ் மற்றும் சிந்துவை வாழ்த்தினர்.
இந்நிலையில், இன்று காலை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ராதாரவி, சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அந்தப் படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.