பயன்படுத்தி பண மோசடியில் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்த முன்னாள் பிரதியமைச்சரின் உதவியாளரும் முன்னாள் இராணுவ வீரருமான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (வியாழக்கிழமை) அதிகாலை குறித்த பிரதியமைச்சரின் உத்தியோகபூர்வ வாசலில் வைத்து கைது செய்துள்ளதாக மட்டு.ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவிக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ்.சமந்த தலைமையிலான புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் சம்பவதினமான இன்று அதிகாலை முன்னாள் பிரதியமைச்சரின் உத்தியோகபூர்வ வாசலில் மறைந்திருந்த நிலையில் புதிய வீதி, ஏறாவூர் 2ஆம் பிரிவைச் சேர்ந்த 35 வயதுடையவரை கைது செய்துள்ளனர்.
மேலும் சந்தேகநபர் இராணுவத்தில் சேர்ந்து பயிற்சியின் பின்னர் அங்கிருந்து தப்பிவந்த நிலையில், குறித்த பிரதியமைச்சரின் நீண்ட நாள் உதவியாளராக கடமையாற்றி வந்துள்ளதுடன் பிரதேசத்தில் பல்வேறு குற்றச்செயல்கள் மூலம் கைது செய்யப்படும் சந்தேகநபர்களின் உறவினர்களிடம் பொலிஸ் உயர் அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி அவர்களிடம் பண மோசடி மற்றும் சிலருடைய அந்தரங்க விடயங்களை காணொளி அல்லது புகைப்படம் ஆகியவற்றின் ஊடாக வைத்துக்கொண்டு அதனை முகநூலில் பிரசுரிக்கப் போவதாக மிரட்டி பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதியான சஹரானின் நுவரெலியா முகாமில் பயிற்சி பெற்றார் என சந்தேகத்தில் பண்டாரவளையில் வைத்து கைது செய்து பின்னர் 21 நாளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டார் எனவும் பல சிம் காட் அட்டைகளை வைத்து இவ்வாறான பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் இந்நிலையில் தற்போது பெண் ஒருவரிடம் ஒரு இலச்சத்து 15 ஆயிரம் ரூபாயை ஈசிகாஸ் மூலம் மோசடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.