வந்த சிலர், வழிப்பறி கொள்ளைகளை மேற்கொண்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் பெரியகல்லாறு ஆலையடி பகுதியில் இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
இரண்டு பேர் ஆயுதங்களுடன் நின்றுகொண்டு, குறித்த வீதியூடாக பயணித்தவர்களை வழிமறித்து, அவர்களிடம் இருந்த பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை திருடிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீன்வியாபாரிகள், மரக்கரி வியாபாரிகள், தொழிலுக்கு சென்றவர்கள் என பலரிடம் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.