கப்ரியலா தீவில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்த விமானி அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த விமானி, பயிற்றுவிப்பாளர் அலெக்ஸ் பல்சென் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதனை அவரது குடும்பத்தினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ட்ரான்ஸ்போர்ட் கனடாவுடன் ஒரு பரிசோதனையாளராக பணியாற்றிய பல்சென், தனது பைபர் ஏரோஸ்ரார் என்ற இரட்டை எஞ்சின் புரொப்பெல்லர் விமானத்தில் பயணித்த வேளையிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இரட்டை என்ஜின்கள் கொண்ட விமான விபத்தில், எத்தனை பேர் பயணித்தனர் மற்றும் உயிரிழப்புக்கள் குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் இல்லை. இந்த நிலையில் இதுகுறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை மாலை 6:10 அளவில், கப்ரியலா தீவின் வடமேற்கு மூலையில் இந்த விமானம் விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது