வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொஹமட் தவாஹிர் அப்துர் ரஹ்மான் என்பவரின் வீட்டின் மீதே பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனாலும் வீட்டிலிருப்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் தாக்குதலுக்கான காரணம் குறித்து எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.