சுற்றுலாவிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடுகளில் இலங்கை முதலிடம் வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.எஸ்.ஏ. ருடே (usatoday.com) என்ற பிரபல இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளால் கவரப்பட்ட முதல் 20 நாடுகளில் இலங்கை முதலிடம் பிடித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் சுற்றுலாத் தளங்கள், உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் இயற்கை அமைவிடங்கள் அனைத்தும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் விடயங்களாக உள்ளதாக அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் குளிர்கால பருவத்தில் டிசம்பர் தொடக்கம் பெப்ரவரி வரையான காலங்களில் இலங்கை போன்ற நாடுகள் உடலுக்கு ஏற்ற சமநிலையை ஏற்படுத்தும் காலநிலையைக் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில், இலங்கைக்கு அடுத்து Galápagos Islands என்ற தீவும் டுபாய், வியட்நாம், ஆர்ஜென்ரீனா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன