பிறகு கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் இருவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஸ்பிரிங் பேங்க் அவென்யூவில் உள்ள ஸ்கோடியா வங்கியில் நேற்று (புதன்கிழமை) மாலை 3:15 மணியளவில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதற்றமான நிலை நிலைவியதால், வங்கி மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸின் கூற்றுப்படி, ஆயுதமேந்திய இரண்டு ஆண்கள் வங்கிக்குள் நுழைந்து பணம் கோரியதாகவும், பின்னர் வாகனத்தில் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பழைய மொடல், நான்கு கதவுகள் கொண்ட கருப்பு நிற ஹோண்டா கார் என பொலிஸார் விபரித்துள்ளனர்.
எனினும், இந்த சம்பவத்தின் போது யாரும் காயமடையவில்லை என்றும், விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்