LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, December 9, 2019

எரித்துக் கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் உடல் தகனம்

உத்தரப் பிரதேசம் மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் உடல் அவரது கிராமத்தில் இன்று அடக்கம் செய்யப்பட்டது.

அவர் பிறந்த கிராமத்தில் உள்ள இடுகாட்டில் தாத்தா, பாட்டி கல்லறைகளுக்கு அருகாமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது இறுதிச் சடங்குகள் மற்றும் உடல் அடக்கத்தின்போது ஏராளமான பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி என்ற 2 பேர் கடத்திச் சென்று இந்த பாதக செயலில் ஈடுபட்டனர். இருப்பினும், கடந்த மார்ச் மாதம்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த வியாழக்கிழமை காலை அந்த இளம்பெண் தனது வீட்டில் இருந்து ரேபரேலி நீதிமன்றத்துக்கு சென்ற நிலையில், குறித்த பெண்ணை ஐவர் தீயிட்டு எரித்தனர்.

இந்நிலையில், 90 வீதம் தீக்காயங்களுடன் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண், கடந்த வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். அவரை தீ வைத்து எரித்த 5 பேரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இறந்த பெண்ணின் உடல் டெல்லியில் இருந்து பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் உன்னாவ் மாவட்டத்துக்கு நேற்றிரவு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில் இன்று அடக்கம் செய்யப்பட்டது.



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7