அல்ல என்றும் பல தீயவர்கள் தன்னை மௌனமாக்க விரும்புகிறார்கள் என்றும் வெர்ஜினியா ரொபேர்ட்ஸ் ஜொஃப்ரே தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்ரைனால் தான் பலமுறை கடத்தப்பட்டதாகவும், 2001 ஆம் ஆண்டில் இளவரசர் ஆன்ட்ரூவுடன் 17 வயதில் உறவு கொள்ளும்படி அழுத்தம் கொடுத்ததாகவும் வெர்ஜினியா கூறியுள்ளார்.
வெர்ஜினியா ரொபேர்ட்ஸ் ஜொஃப்ரே தன்னைப் பற்றி எழுதப்பட்ட ஒரு ருவிற்றுக்குப் பதிலளிக்கும் விதமாக, பணக்காரர்களையும் அவர்களோடு சேர்ந்தவர்களையும் பாதுகாக்க எஃப்.பி.ஐ (F.B.I) தன்னைக் கொன்றுவிடும் என்று கூறியுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தாயான தான் எந்த வகையிலும் தற்கொலை செய்துகொள்ள மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் எனக்கு ஏதேனும் நேர்ந்தால், என் குடும்பத்தின் பொருட்டு என் பிள்ளைகளைப் பாதுகாக்க எனக்கு உதவுங்கள். பல தீயவர்கள் என்னை மௌனமாக்க விரும்புகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
வெர்ஜினியா ரொபேர்ட்ஸ் ஜொஃப்ரேயுடன் எந்தவிதமான பாலியல் தொடர்பு அல்லது உறவு இல்லை என்று இளவரசர் ஆன்ட்ரூ கடுமையாக மறுத்துள்ளார். மேலும் இதற்கு மாறாகக் கூறப்படும் எந்தவொரு கூற்றும் தவறானது மற்றும் அடிப்படையற்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.
வெர்ஜினியா ரொபேர்ட்ஸ் ஜொஃப்ரேவைச் சந்தித்ததாக தனக்கு நினைவு இல்லை என்றும், தாம் இருவரும் ஒன்றாக நிற்பது போன்று காண்பிக்கும் ஒளிப்படம் போலியானதாக இருந்திருக்கலாம் என்றும் ஆன்ட்ரூ கூறியுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் பிபிசியின் பனோராமா நிகழ்ச்சியின் நேர்காணலில் வெர்ஜினியா ரொபேர்ட்ஸ் ஜொஃப்ரே, இளவரசர் ஆன்ட்ரூவைப் பற்றிக் கூறினார். என்ன நடந்தது என்பது அவருக்குத் தெரியும். என்ன நடந்தது என்று எனக்குத் தெரியும். எங்களில் ஒருவர் சொல்வது மட்டுமே உண்மை என்று குறிப்பிட்டார்.