பெய்துவருகின்ற நிலையில் இரணைமடுக் குளத்தின் நிலை தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டார்.
கிளிநொச்சிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர், குளத்திற்கான நீர் வருகை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அத்துடன், நீர்பாசனத் திணைக்கள பொறியியலாளர்களுடன் கலந்துரையாடி நீர் முகாமைத்தவம் மற்றும் மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களை குறித்து ஆராய்ந்தார்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மக்கள் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். மக்களுக்கான சுகாதாரம், உணவு உள்ளிட்டவை கிளிநாச்சி இடர் முகாமைத்துவ நிலையத்தினால் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.