தடை விதிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 31ஆம் திகதி முதல் இவ்வாறு தடை செய்யப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும், தொடர்ந்தும் அத்தகைய செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்காரணமாகவே மீண்டும் அதுதொடர்பான இறுதி தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.