உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தை அடுத்து சிவா இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.
28 வருடங்களுக்குப் பிறகு நடிகை குஷ்புவும் 24 வருடங்களுக்குப் பிறகு நடிகை மீனாவும் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார்கள். மேலும் கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் பூஜை இன்று (புதன்கிழமை) சன் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, இயக்குனர் சிவா, இசையமைப்பாளர் இமான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
— Sun Pictures (@sunpictures) December 11, 2019