உலகநாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஜப்பான் அரசு பலப்படுத்தப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஜப்பான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வடகொரியா நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய அணு ஆயுதச் சோதனையை நடத்தியுள்ளது. அங்கு நடைபெறும் அணு ஆயுதச் சோதனைகள் மற்றும் அதுதொடர்பான நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கான கதவு மூடப்படுவதாக அறிவித்த சில மணி நேரங்களில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருநாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், அமெரிக்காவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா மிக முக்கிய அணுஆயுதத்தை சோதித்து அதிரவைத்துள்ளது.
இந்த நிலையில் இவ்விடயம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வடகொரியாவுடனான சிறப்புகுரிய நட்புறவு நீடிக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘இதேபோன்று தொடர்ந்து கிம் ஜோங் உன் மிகவும் புத்திசாலியாக இருக்கலாம். ஆனால், இதேபோன்று விரோதப் போக்குடன் செயல்பட்டால், அதிகம் இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும்’ என பதிவிட்டுள்ளார்.
இந்தாண்டு மே மாதம் முதல் வடகொரிய நடத்தியுள்ள 12ஆவது அணு ஆயுதச் சோதனை இதுவாகும்.