ஒன்று வெடித்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளததாகவும் பலர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தினால் பாதிக்கப்பட்ட 23 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
வெள்ளைத்தீவிலுள்ள குறித்த எரிமலை வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, அதன் வாய் பகுதியில் சுற்றுலாப்பயணிகள் நடந்து சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
சுமார் 100 சுற்றுலாப்பயணிகள் எரிமலைக்கு அருகாக இருந்த நிலையிலேயே, நியூஸிலாந்து நேரப்படி இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு எரிமலை குமுற ஆரம்பித்துள்ளது.
இந்த வெடிப்பினால் மேலெலும்புள்ள சாம்பல் புகை, சுமார் 12,000 அடி உயரத்திற்கு தென்படுவதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில் சுற்றுலாப்பயணிகளில் பலர் காணாமற்போயுள்ளதுடன், அந்தப் பகுதியெங்கும் புகை வியாபித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.