பாடசாலையில் ஏற்பட்டுள்ள நீர் விநியோக தடை நாளை (வெள்ளிக்கிழமை) சீரமைக்கப்பட்டு வழமைக்கு திரும்புமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர் விநியோக தடை காரணமாக நேற்று மற்றும் இன்று பாடசாலை வகுப்புகளை கிரேட்டர் சாஸ்கடூன் கத்தோலிக்கம் இரத்து செய்தது.
இன்று பிற்பகலுக்கு பிறகு இதன் சீர்திருத்த பணிகள் முன்னெடுக்கப்படுவதால், நாளை பாடசாலை வகுப்புகள் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாடசாலையின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்படுமென பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.