காலநிலை காரணமாக கடல் கொந்தளிப்பு அதிகரித்துள்ளது. இதனால் அம்பாறை மாவட்டத்தில் கரையோர பிரதேசங்கள் கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக நிந்தவூர் கடற்கரைப் பிரதேசம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றமையினால் கடற்கரையை அண்டிய பகுதியில் உள்ள மீன் வாடிகள் மற்றும் கடற்கரை பகுதியில் உள்ள தென்னை மரங்கள் கடல் அரிப்பினால் கடலினுள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன.
மேலும் பல தென்னை மரங்கள் கடலரிப்பால் கடலினுள் இழுத்துச் செல்லப்படும் நிலையில் உள்ளன.
அம்பாறை, பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான கடற்கரைப் பிரதேசங்கள் கடலரிப்பினால் மிகவும் பாதிக்கப்பட்டு கடற்றொழிலை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த கடலரிப்பு குறித்து அரசியல் வாதிகளுக்கும் துறைசார் அதிகாரிகளுக்கும் பல தடவை மக்கள் தெரியபடுத்தியும் பாராமுகமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.