மூன்றாவது அமர்வினை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளமையானது இடைக்கால அரசாங்கத்தின் மீது பாரிய சந்தேகத்தினை தோற்றுவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
மக்களுக்கு சேவையாற்றும் விடயங்களுக்கு நாடாளுமன்றத்தினுள் இடைக்கால அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி தலைவர் விவகாரம் குறித்து தொடர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் கிடையாது என்றும் எழுந்துள்ள சவால்கள் குறித்து கட்சியின் தலைவரும் சிரேஷ்ட உறுப்பினர்களும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் செயற்பாடுகள் ஒழுங்குபடுத்தல் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எட்டாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது சபை அமர்வுகளை நிறைவுக்கு கொண்டு வந்து நாடாளுமன்ற அமர்வினை அடுத்த மாதம் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்து வர்த்தமானி வெளியிட்டுள்ளமைக்கு எவ்விதமான உரிய காரணிகளும் கிடையாது.
ஜனாதிபதி தேர்தல் நிறைவுப் பெற்றதை தொடர்ந்து ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் பாரம்பரிய கோட்பாடுகளுக்கு இணங்க சிம்மாசன பிரசங்கம் உள்ளிட்ட இதர விடயதானங்களை முன்னெடுக்க வேண்டும்.
ஆனால் அவர் மாறுப்பட்ட விதத்தில் செயற்பட்டுள்ளமை பின்வரும் விடயங்களை மையப்படுத்திய சந்தேகத்தினை தோற்றுவித்துள்ளன” என அவர் மேலும் தெரிவித்தார்.