நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்க பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அவர்கள் நாளை (வியாழக்கிழமை) அங்கு சாட்சியம் வழங்கவுள்ளனர்.
கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தின் பிரதான பரிசோதகர், முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட மேலும் சிலர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் கிடைக்கப் பெற்ற புலனாய்வு தகவல் தெளிவானது அல்லவென சில பொறுப்பு வாய்ந்தவர்கள் கூறினாலும் அவை நம்பத்தகுந்த புலனாய்வு தகவல் என சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான விஷேட நிபுணத்துவரான பேராசிரியர் ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கிடைக்கப்பெற்ற தகவல் ஊடாக அந்தத் தாக்குலை தடுத்திருக்க வாய்ப்பு இருந்ததாகவும் அவர் குறிபபிட்டுள்ளார்.