இன்று(செவ்வாய்கிழமை) ஒருங்கிணைப்பு குழு தலைவர் தர்மபால செனவிரத்ன தலைமையில் ஆரம்பமாகிய போது மின்சாரம் தடைப்பட்டதனால் சில நிமிடங்கள் தாமதமாகி கூட்டம் ஆரம்பமாகியது.
வவுனியாவில் மின்சார திருத்த வேலை வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சார சபை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இன்று ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெற இருந்த சூழலில் மின் பிறப்பாக்கி வசதிகளை மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்திருக்காமை பெரும் விசனத்தினை ஏற்படுத்தியிருந்தது.
இதுவரை காலமும் மின்சாரம் இன்றி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் இடம்பெறாத நிலையில், மின்சார தடைப்பட்ட நிலையில் முதன் முதலாக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெற்றமையினால் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்தனர்.
வெப்பமான சூழல் மற்றும் கூட்டத்தில் இடம்பெற்ற விடயங்கள் பின்வரிசையில் இருந்தவர்குளுக்கு கேட்காத நிலைமையும் இதன்போது காணப்பட்டது.