பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வரையான எ-35 வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியூடாக பரந்தனில் இருந்து புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு செல்கின்றவர்கள் மாற்று வழியாக மாங்குளம் வீதியை பயன்படுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் பல்வேறு வீதிகளின் ஊடாக வெள்ளம் பாய்ந்து வருகின்ற நிலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அதேபோன்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்தையன்கட்டு பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட40 குடும்பங்களை சேர்ந்த 75 பேர் பாடசாலையில் தஞ்சம் புகுந்துள்ளதுடன் முத்தையன்கட்டு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.