வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவருமான பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாசவின் தலைமையில் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர ஆகியோரும் அந்த குழுவில் அங்கம் வகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குழுவின் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாச தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.