சசிகலாவின் வீட்டை இடிக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.
குறித்த வீடு மிகவும் பாழடைந்த நிலையில் காணப்படுவதாக தெரிவித்துள்ள மாநகராட்சி நிர்வாகம் அதனை இடிப்பதற்கான அறிவிப்பாணையை கடந்த 17ஆம் திகதி வழங்கியது. இதனையடுத்து குறித்த அறிவிப்பாணை இன்று (வியாழக்கிழமை) ஒட்டப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலில், ‘இக்கட்டடம் மிகவும் பழுதடைந்த நிலையில் எந்த நேரத்திலும் இடியும் தருவாயில் உள்ளது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இக்கட்டுமானம் அவ்வழியே செல்பவர்களுக்கும் கட்டடத்தைப் பயன்படுத்துபவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
அதுமட்டுமில்லாமல் பொதுமக்கள் வந்து செல்லும் இடத்திற்கும் பள்ளிக்கும் அருகில் உள்ளது. எனவே இந்த அபாயகரமான கட்டடத்தை எந்த விதமான உபயோகத்துக்கும் பயன்படுத்துவதைத் தவிர்த்து பொதுமக்களுக்கும் கட்டடத்தின் உள் இருப்போருக்கும் ஆபத்து ஏற்படாதவாறு கட்டடத்தைத் அறிவிப்பு கிடைத்த 15 நாட்களுக்குள் அப்புறப்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் குறித்த கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.