நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தவில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ராஜித சேனாரத்ன மேலும் கூறியுள்ளதாவது, “கடத்தலுக்கு உள்ளான இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரக ஊழியர், தற்போது பேசுவதற்கு கூட முடியாத வகையில் அச்சமடைந்த நிலையில் காணப்படுகின்றார்.
அத்துடன் அவர், குடும்பத்தினருடன் கூட சரியாக பேசமுடியாத நிலையில் காணப்படுகின்றபோது, அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவதில் நியாயம் இல்லை.
மேலும் கடத்தலுக்கு உள்ளான குறித்த பெண் உள்ளிட்ட அவரது குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறி சுவிட்ஸர்லாந்துக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை எங்களது 5 வருட ஆட்சி காலத்தில் எவரும் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி நாட்டை விட்டு வெளியேறியது கிடையாது” என குறிப்பிட்டுள்ளார்