விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் குத் என்கிற பகுதியில் பேருந்தொன்று லொறியொன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் பேருந்து பலத்த சேதமடைந்துள்ள நிலையில், 9 பேர் உயரிழந்துள்ளதுடன், மேலும் பத்து பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என வைத்திசாலை வட்டாரங்கள் தெரிவிப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.