சென்ற லோரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
யுனான் மாகாணத்தின் வென்ஷான் நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த லொரி வீதியில் இருந்த பாதுகாப்பு சுவர் மீது திடீரென மோதிக் கவிழ்ந்தது.
அப்போது, எதிர்த்திசையில் வந்த ஒரு சிறிய கார் மற்றும் இரு சக்கர வாகனம் ஒன்று லொரியின் அடியில் சிக்கியது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடம் சென்று லொரி சாரதியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.