பொருளாதாரத்தை சீரழித்து விட்டது என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லியில் ராம்லீலா மைதானத்தில் ‘நாட்டை காப்போம்’ என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி ஒன்று இன்று (சனிக்கிழமை) நடந்தது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதன்போது, “மோடி தலைமையிலான அரசு ஆறே மாதங்களில், நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டது. ஆனால் நிதி அமைச்சரோ எல்லாம் சரியாக இருப்பதாகவும், உலக அளவில் நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துள்ளதாகவும் ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்து வருகிறார்.
பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்க மத்திய அரசுக்கு எந்த திட்டமும் இல்லை” என அவர் சாடியுள்ளார்.