ஆயிரத்து 480 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் 5 பேர் உயிரிழந்திருப்பதுடன், 4 பேர் காணாமல் போயுள்ளனரென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
பதுளை, மட்டக்களப்பு, அம்பாறை, மன்னார், முல்லைத்தீவு, களுத்துறை, அம்பாந்தோட்டை, கேகாலை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்கள் கடும் மழை, மண்சரிவு, வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நேற்று இரவு ஏற்பட்ட நிலத் தாழிரக்கம் காரணமாக மாத்தளை –ரத்தோட்டை பகுதியை சேர்ந்த 16 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் சில தினங்களுக்கும் இந்த சீரற்றக் வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 100 தொடக்கம் 150 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது