பொதுப் பட்டமளிப்பு விழா 11ஆவது அமர்வுடன் நிறைவு பெற்றுள்ளது.
கடந்த 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் 11 நாட்களாக இடம்பெற்ற இந்த பட்டமளிப்பு விழா இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவுபெற்றுள்ளது.
கலைப்பீடம், விஞ்ஞான பீடம், முகாமைத்துவக் கற்கைகள், வணிகபீடம், விவசாய பீடம், மற்றும் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 1369 உள்வாரிப் பட்டதாரிகளுக்கும் உயர் பட்டப்படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த 64 பட்டதாரிகளுக்கும் 31 டிப்ளோமாதாரிகளுக்கும் பட்டங்களும் தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன், 348 வெளிவாரிப் பட்டதாரிகளின் பெயர்கள் வாசிக்கப்பட்டு பட்டங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.
இந்த பட்டமளிப்பு வைபவத்தைத் தொடர்ந்து, இன்று மாலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இசை மற்றும் நடனத்துறைகள் இணைந்து வழங்கும் கலாசார நிகழ்வுகள் மாலை 5.30 மணி தொடக்கம் கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவுள்ளது.
பட்டமளிப்பு வைபவத்தின் ஒரு பாகமாக அமையும் நினைவுப்பேருரைகளான சேர்.பொன் இராமநாதன் நினைவுப்பேருரை இம்மாதம் 12ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கும் சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப்பேருரை 13ம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 3.00 மணிக்கும் கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவுள்ளன.