34ஆவது பொது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இடம்பெறவுள்ளது.
பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் நாளை(வெள்ளிக்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
11 அமர்வுகளாக 34ஆவது பொது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இடம்பெறவுள்ளது.
இதன்போது கலைப்பீடம், விஞ்ஞான பீடம், முகாமைத்துவக் கற்கைகள், வணிகபீடம், விவசாய பீடம், மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஆயிரத்து 369 உள்வாரிப் பட்டதாரிகளுக்கும் உயர் பட்டப் படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த 64 பட்டபின் படிப்பு பட்டதாரிகளுக்கும், 31 டிப்ளோமாதாரிகளுக்கும் பட்டங்களும், தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
அத்துடன், 348 வெளிவாரிப்பட்டதாரிகளின் பெயர்கள் வாசிக்கப்பட்டு பட்டங்கள் உறுதிப்படுத்தப்படவுள்ளன.