அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் பிப்ரவரி முதலாம் திகதி 2020-21ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.
அதற்கு முன்பாக ஜனவரி 31ம் திகதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் வரவுசெலவு தாக்கலின்போது வழக்கமான நடைமுறைகளே பின்பற்றப்படும் என்றும் அதில் மாற்றம் ஏதுமில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.