2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பொதுமக்கள் பர்வைக்காக வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கரைச்சி பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான விபரங்கள் 29.11.2019 முதல் இரு வாரங்களுக்கு பின்வரும் இடங்களில் காட்சிப்படுத்தப்படும் என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.
குறித்த பாதீடுகள் தொடர்பான விடயங்களை பார்வையிட்டு பொதுமக்கள் தங்கள் அபிப்பிராயங்கள், ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகளை சபைக்கு தெரிவிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாதீடு தொடர்பான விடயங்கள் கரைச்சி பிரதேசசபை, உப பிரதேச சபைகள், பிரதேச செயலங்கள், நூலகங்கள் ஆகிய இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் பாதீடு தொடர்பான விடயங்களை 27.11.2019 திகதி தொடக்கம் 09.12.2019ஆம் திகதிவரை பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தலைமை அலுவலகம், புலோப்பளை உப அலுவலகம், புலோப்பளை பொது நூலகம், முள்ளிப்பற்று உப அலுவலகம், முள்ளிப்பற்று பொது நூலகம், முகமாலை உப அலுவலகம், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் ஆகிய இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அவற்றை பார்வையிட்டு தங்கள் அபிப்பிராயங்கள், ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்