அதனடிப்படையில் கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த குருசாமி மில்டன் மற்றும் களுதான்திரிகே ருவன் எனும் ஆஜா ஆகிய இருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ள குருசாமி மில்டன் எனும் சந்தேகநபர் நீதிமன்றத்திற்கு வராத காரணத்தினால் அவரை கைது செய்யுமாறு திறந்த பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2001ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற தனிப்பட்ட பிரச்சினை காரணமாக 17 வயதுடைய பிரசாத் விஸ்வன்ன எனும் இளைஞன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபரினால் குறித்த இருவருக்கு எதிராகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நீண்ட விசாரணைகளின் பின்னர் சந்தெகநபர்களக்கு எதிரான குற்றம் எவ்வித சந்தேகமும் இன்றி நிருபிக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.