உயிர்பிழைத்து தற்போது 13 வயதை எட்டியுள்ள இஸ்ரேலைச் சேர்ந்த சிறுவனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில், மிகுந்த சோகத்தையும் ஈடு செய்ய முடியாத இழப்பையும் விஞ்சிய உன் கதை ஒவ்வொருவருக்கும் உந்துதலை தரக்கூடியது என மோடி குறிப்பிட்டிருந்தார்.
இந்த கடிதத்தை இஸ்ரேலுக்கான இந்திய தூதர் சிறுவன் மோஷியிடம் நேரில் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற மும்பை தாக்குதலில் 166 பேர் வரையில் உயிரிழந்தனர். இதில் இரண்டு வயது குழந்தையாக இருந்த மோஷியின் பெற்றோரும் உள்ளடங்குகின்றனர்.
பின்னர் குடும்பத்தாருடன் இஸ்ரேல் அனுப்பிவைக்கப்பட்ட குழந்தை மோஷியை கடந்த 2017-ஆம் ஆண்டு இஸ்ரேல் சென்ற மோடி சந்தித்தார்.
தற்போது 13 வயதை எட்டியுள்ள சிறுவன் மோஷிக்கு யூத வழக்கப்படி கயிறு கட்டும் விழா நடைபெறவுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி கடிதம் வாயிலாக சிறுவன் மோஷிக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.